தி.மு.க

“அ.ம.மு.க-வில் என்ன பிரச்னை என்பதை மாநாட்டில் கூறுவேன்” - தி.மு.க-வில் இணைந்த பரணி கார்த்திகேயன் பேட்டி!

புதுக்கோட்டை அ.ம.மு.க மாவட்ட செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.

“அ.ம.மு.க-வில் என்ன பிரச்னை என்பதை மாநாட்டில் கூறுவேன்” - தி.மு.க-வில் இணைந்த பரணி கார்த்திகேயன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரான பரணி கார்த்திகேயன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.இரகுபதி எம்.எல்.ஏ, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

அ.தி.மு.க மணமேல்குடி ஒன்றிய செயலாளராக 10 வருடங்கள் பணியாற்றியுள்ளார் பரணி கார்த்திகேயன். மணமேல்குடி நகராட்சி அ.தி.மு.க சேர்மேனாகவும் இருந்துள்ளார் பரணி கார்த்திகேயன். இவர் அறந்தாங்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அ.ம.மு.க-வில் என்ன பிரச்னை என்பது குறித்து அந்த மாநாட்டில் கூறுவேன். அ.ம.மு.க.விலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் பல நிர்வாகிகள் தி.மு.கவில் இணைய உள்ளனர். தி.மு.க தலைமை மக்களுக்கும் எனக்கும் பிடித்துள்ளதால் தி.மு.க-வில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories