தி.மு.க

சென்னை முழுவதும் திமுக சார்பில் மழை நீர் சேமிப்பு திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னையில் தி.மு.க சார்பில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைத் துவக்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 1000 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் திமுக சார்பில் மழை நீர் சேமிப்பு திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சைதை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்துவதற்காக 1000 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கான தொடக்க விழா சைதாப்பேட்டை நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் தலைமை தலைமை வகித்தார்.

விழாவில் தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தினை தொடக்கி வைத்து அவர் பேசுகையில், "மழை நீர் சேகரிப்பு திட்டம் அருமையான திட்டம். குடிநீர் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும் திட்டம். ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய வேலையை எதிர்கட்சியான தி.மு.க செய்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க ஆளும் கட்சியாகவும், ஆளுங் கட்சியாக உள்ள அ.தி.மு.க எதிர்கட்சியாகவும் இருப்பதாக மக்களுக்கு தோன்றுகிறது. என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கு ஆட்சியாளர்களே காரணம். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. குடிநீருக்காக மக்கள் பல இடங்களில் அலைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 5, 6 மாதங்களுக்கு முன்பே தண்ணீர் பஞ்சம் வரும் என எச்சரிக்கப்பட்டது. ஆட்சியில் உள்ளவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர்.

இதனை கருத்தில்கொண்டு தான் தி.மு.க சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணி மக்கள் பங்களிப்போடு துவங்கப்பட்டது. ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாய் எப்போதும் உங்களோடு இணைந்து இருப்போம். என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories