தி.மு.க

கிரண்பேடி குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு : தி.மு.க எம்.பி.க்கள் எதிர்ப்பு !

புதுச்சேரி துனைநிலை ஆளுநர் கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து மக்களவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிரண்பேடி குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு : தி.மு.க எம்.பி.க்கள் எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தமிழக மக்களை சுயநலம் மிகுந்தவர்கள்; கோழைகள் என விமர்சித்தது தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கிரண்பேடியின் இந்தக் கருத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், கிரண்பேடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தி.மு.க-வினர் நேற்று புதுவை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கிரண்பேடி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்குமாறு தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால், ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து கிரண்பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். கிரண்பேடி குறித்து மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியபோது பா.ஜ.க எம்.பிக்கள், கூச்சல் குழப்பம் எழுப்பினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories