தி.மு.க

சட்டப்பேரவையில் இன்று : மானிய கோரிக்கை விவாதத்தில் கேள்வியெழுப்பிய தி.மு.க எம்எல்ஏ-க்கள்!

சட்டப்பேரவையில் இன்று தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, கோரிக்கைகளையும் முன்வைத்துப் பேசினர்.

சட்டப்பேரவையில் இன்று : மானிய கோரிக்கை விவாதத்தில் கேள்வியெழுப்பிய தி.மு.க எம்எல்ஏ-க்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய கல்விக் கொள்கை குறித்தும், நீட் குறித்தும் கேள்விகளை முன்வைத்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை புதைத்து, மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் செயல்களையே மத்திய அரசு செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, கோரிக்கைகளையும் முன்வைத்துப் பேசினர்.

சட்டப்பேரவையில் இன்று : மானிய கோரிக்கை விவாதத்தில் கேள்வியெழுப்பிய தி.மு.க எம்எல்ஏ-க்கள்!

சட்டப்பேரவையில் இன்று வனம் - சுற்றுச்சூழல் துறை மான்யக் கோரிக்கையின் போது தி.மு.க எம்.எல்.ஏ தா.உதயசூரியன், “மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்த அனுமதி வழங்க வேண்டும்; கல்வராயன் மலையில் விளைச்சல் நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கால்நடைகளுக்கான தீவனங்கள் - உணவுப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலமாக மான்ய விலையில் வழங்கவேண்டும்” என சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ., எஸ்.ரகுபதி கோரிக்கை விடுத்தார்.

“திண்டிவனம் தொகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும்” என தி.மு.க எம்.எல்.ஏ., பெ.சீத்தாபதி சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.

“திருவெறும்பூர் தொகுதியில் உள்ள இரயிலடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படுமா?” என திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் இன்று : மானிய கோரிக்கை விவாதத்தில் கேள்வியெழுப்பிய தி.மு.க எம்எல்ஏ-க்கள்!

“கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள பல ஊராட்சிகளில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படாமல் உள்ளன. எனவே, அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்” என கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., சட்டமன்றத்தில் வலியுறுதியுள்ளார்.

“ஒட்டன்சத்திரம் தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக கலை - அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா?” என தி.மு.க கொறடா அர.சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories