தி.மு.க

நீட், இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சமூகநீதியையும், மாநில உரிமையையும் பாதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு, நீட் தேர்வு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சமூகநீதியையும், மாநில உரிமையையும் பாதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு, நீட் நுழைவுத்தேர்வு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழை எளிய - தாழ்த்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவை தகர்க்கும் வகையில், மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட “நீட்” தேர்வு, +2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியாரின் தலைப்பாகையை காவி வண்ணத்தில் தமிழக அரசு அமைத்தது மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின் மூலம் பா.ஜ.க அரசு இந்தியை திணிக்க நினைப்பது ஆகியவற்றிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க மாணவரனி மாநில செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் டாக்டர். ரவீந்திரநாத், வழக்கறிஞர் அருள்மொழி, அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories