முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்ததின விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.
“பெரியாரின் சுயமரியாதை, அண்ணாவின் இன உணர்வு, கலைஞரின் மாநில சுயாட்சி எனும் மூன்று ஆயுதங்களை என்றைக்கும் எங்களிடத்திலிருந்து யாராலும் பிரிக்க முடியாது.”
- மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவர்
“தி.மு.க வென்றதால் என்ன பயன் எனக் கேட்டார்கள்...
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் மேம்பட நாங்கள் போராடுவோம்.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல் மொழியாக நாங்கள் போராடுவோம்.
கச்சத்தீவை மீட்க நாங்கள் போராடுவோம்.
மரண தண்டனையை ஒழிக்க நாங்கள் போராடுவோம்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நாங்கள் போராடுவோம்.
கேபிள் கட்டணத்தைக் குறைக்க நாங்கள் போராடுவோம்.
ஜி.எஸ்.டி வரியை ஒழுங்குபடுத்துவதற்குப் போராடுவோம்.
மேகதாது அணையை தடுக்கிற முயற்சியிலே நிச்சயமாக ஈடுபடுவோம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நாங்கள் போராடுவோம்.
மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நாங்கள் போராடுவோம்.
இந்தப் போராட்டக் குணத்தை தி.மு.க என்றைக்கும் கைவிடாது.
தி.மு.க வென்றதால் என்ன பயன் என நாடாளுமன்றம் கூடுகிறபோது நாங்கள் நிரூபித்துக் காட்டுகிறோமா இல்லையா என்பதைப் பாருங்கள்.”
- மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவர்
“தலைவர் கலைஞர் அவர்களே, தேர்தலில் பெருவெற்றி பெறச்செய்த மக்களுக்கு மட்டுமல்ல; எங்களை இன்றைக்கும் இயக்கிக்கொண்டிருக்கிற உங்களுக்கும் நன்றி சொல்கிற கூட்டம்.”
- மு.க.ஸ்டாலின், தி.மு.க தலைவர்
ஒற்றுமையோடு தேர்தல் பணியில் ஈடுபட்டு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அண்ணா மறைவுக்குப் பிறகு தலைவர் கலைஞர் தலைவராகப் பொறுப்பேற்றுச் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி நம் கையில் இல்லையே எனக் கவலைகொள்ள வேண்டாம்; தமிழகத்தின் மீட்சியும், இந்தியாவின் மீட்சியும் நம் கையில் தான் இருக்கிறது.
- கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி திராவிட இயக்கத்தின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.
- கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
“நமது நோக்கம் என்பது நமது கொள்கைதான். நமது கொள்கை வெற்றிபெறவேண்டும். நம் தத்துவார்த்த கொள்கைகள் வெற்றிபெற மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து இணைந்து பணியாற்றவேண்டும்.”
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் கிடைத்தது. மோடிக்குத் தேரோட்டிய எடப்பாடியால் வெற்றிபெற முடியவில்லை.
- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
இந்தித் திணிப்பை ஆதரிக்கும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையைத் தெருவுக்குத் தெரு தீவைத்துக் கொளுத்துவோம்.
- வைகோ, ம.தி.மு.க பொதுச் செயலாளர்
வேங்கையின் மைந்தன்; கலைஞரின் வெற்றித் திருமகன் அகில இந்தியாவின் மொத்தக் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு திராவிட இயக்கத்தின் பெருமையை உயர்த்திருக்கிறார்.
- வைகோ, ம.தி.மு.க பொதுச் செயலாளர்
தமிழகத்திலே மக்களின் போராட்டங்களுக்குத் துணையாக நின்று, மக்கள் பிரச்னைகளுக்காக ஓரணியில் இணைந்து போராடியிருக்கிறோம். அதுவே இத்தகைய மகத்தான வெற்றிக்குக் காரணம்.
கே.பாலகிருஷ்ணன், சிபிஐ(எம்) மாநில செயலாளர்
தமிழ்நாட்டில் மதவெறிக்கும், ஜாதிவெறிக்கும் இடமில்லை என தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
- இரா.முத்தரசன், சிபிஐ மாநில செயலாளர்
நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த வலுவான கூட்டணி வெற்றியின் மூலம் தமிழ்நாடு திராவிடப் பாரம்பரியத்தை சிறப்பாக நிலைநிறுத்தியிருக்கிறது.
- காதர் மொய்தீன்
இந்தி திணிப்பு என்பது மொழித் திணிப்பு மட்டுல்ல; கலாசாரத் திணிப்பு. விழாக்களின் வழியாக கலாசார ஊடுருவலை நிகழ்த்துகிறார்கள்.
- தொல்.திருமாவளவன் பேச்சு
பெரியாரின் கொள்கைக்குப் பாதுகாப்பாக இருந்த கடைசித் தூண் விழுந்துவிட்டது என கனவு கொண்டிருந்தவர்கள் எண்ணத்தில் மண் விழ, கழகத்தைக் காப்பாற்றும் ஆற்றல்வாய்ந்த தலைமையாக எழுந்து நின்றார் தலைவர் மு.க.ஸ்டாலின்.
- தொல்.திருமாவளவன் பேச்சு
“சுரை விதைத்தால் சுரைதான் முளைக்கும். பனை விதைத்தால் பனைதான் முளைக்கும். கலைஞரின் பிள்ளை கலைஞரைப் போல்தான் இருக்கும்; அது சோடை போகாது. கலைஞரைப் போல ராஜதந்திரி என இந்தத் தேர்தலில் நிரூபித்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின்.”
- தொல்.திருமாவளவன் பேச்சு
கலைஞர் மறைந்தும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்த திட்டங்களின் வழியாகவும், அவர் அமைத்த சாலைகள், பாலங்கள் மூலமாகவும் இன்றும் எப்போதும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் கலைஞர்.
- எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேச்சு
கலைஞர் வாழ்க்கை வரலாற்றில் திருப்புமுனை தந்த பெரம்பலூர் தொகுதியை எனக்கு ஒதுக்கிய ஸ்டாலினுக்கு நன்றி. சேவை செய்ய வயது என்பது பொருட்டல்ல; அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் கலைஞர்.
- பாரிவேந்தர்
பாரிவேந்தர் பேச்சு : நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அதோடு, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்த நாட்டுமக்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளளோம். கலைஞர் அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
- பாரிவேந்தர்
காண்ட்ராக்டர் நேசமணியை ட்ரெண்ட் ஆக்கியவர்களுக்கு நன்றி : சுப.வீரபாண்டியன்
தமிழக மக்கள் தளபதி அவர்களுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். திராவிட முன்னேற்ற கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அண்ணா மற்றும் கலைஞருக்கு பிறகு மக்களின் அன்பை தளபதி ஸ்டாலின் பெற்றுவிட்டார் என்பது இந்த தேர்தல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை ஏனென்றால் தளபதி முதல்வராகவில்லை என்ற ஆதங்கம் தான் உண்டு.
- தி.வேல்முருகன்