சலிக்காமல் நாட்டு மக்களை ஏமாற்ற நாளொரு பொய்யை பேசிவருபவர் பிரதமர் மோடி என்பது நாம் அறிந்த ஒன்றே. அதிலும் சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலின் ஒரு பிரிவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மெட்ரோ ரயிலை டெல்லியில் 2002-ம் ஆண்டு தொடங்கி வைத்து, முதலில் பயணம் செய்தவர் வாஜ்பாய் எனக் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் கொல்கத்தாவில் 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1972-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் பா.ஜ.க ஆட்சியில் தான் இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது என்ற பொய்யை நிலைநாட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் நப்பாசை.
இதேபோன்று கர்நாடகா தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய மோடி, பா.ஜ.க அரசு கர்நாடக மாநிலத்தில் 33 கோடி வங்கி கணக்குகளை தொடங்க உதவியிருக்கிறது என்றார். ஆனால் கற்பனை மிகையாகிப்போக கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையே 6.77 கோடி தான் என்பதையே மறந்துவிட்டிருக்கிறார் மோடி.
இந்தியாவில் இதுவரை இருந்த 15 பிரதமர்களும் ஒவ்வொரு குணத்திற்கும், குறிப்பிட்ட பெருமைகளுக்கும் பெயர்போனவர்களாக மக்களால் அறியப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் ‘கதை கட்டுவதில்’ சிறந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் மோடி.