தி.மு.க

அரவக்குறிச்சியில் அதிமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது - செந்தில் பாலாஜி பேட்டி

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் தோல்வி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

அரவக்குறிச்சியில் அதிமுகவின் தோல்வி  உறுதி செய்யப்பட்டு விட்டது - செந்தில் பாலாஜி பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஒன்றியம் தென்னிலை பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அரவக்குறிச்சி தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் ஆணையம் நடத்தும் என நம்புகின்றோம். மக்களவை தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொண்ட கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்.எழுச்சியுடன் வாக்களிக்க காத்திருக்கும் மக்களை சுதந்திரமாக நியாயமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற அவர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவினரின் தோல்வி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொண்டனர்.

இதனால் தான் எப்படியாவது தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதில் அதிமுக கவனம் செலுத்தி வருகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர். அன்று மாலையே தேர்தலை ஒத்தி வைக்க ஏற்பாடு செய்தார். இதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது. அது போல அரவக்குறிச்சி தொகுதியிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 1300 கிராமங்கள் உள்ளதாகவும், இதில் 60 சதவீதம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து விட்டோம். இன்னும் 40 சதவீதம் தான் மக்களை சந்திக்க வேண்டும் என்றார். ஆனால் அதிமுகவினர் முழுமையாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யவே முடியாது என்றார்.

banner

Related Stories

Related Stories