தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன. வழக்கு காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18 அன்று நடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியாது.திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இதற்கிடையே, சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் காலமானார். இதனால், அந்த தொகுதியும் காலியானது.
இந்நிலையில், மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் மேற்கண்ட 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
4 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை தி.மு.க தலைமை கழகம் அறிவித்துள்ளது.
* சூலுர் - பொங்கலூர் பழனிசாமி,
* அரவகுறிச்சி - செந்தில் பாலாஜி,
* ஒட்டப்பிடாரம் - எம்.சி.சண்முகையா,
* திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன்
ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.