சினிமா

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...

பிக்பாஸ் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறிய நிலையில் தீபக், சௌந்தர்யா, ரஞ்சித், சத்யா ஆகிய 12 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸில் இடம் பெற்றுள்ளனர்.

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி 35 நாட்களை கடந்து விட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சென்ற வாரம் மேலும் 6 போட்டியாளர்கள் wild card entry யாக வீட்டிற்குள் வந்திருந்தனர். அத்துடன் நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் evict செய்யப்பட்டிருந்தனர். தீபாவளி கொண்டங்களுடன் wild card entry-யும் வந்திருந்ததால் போன வாரம் no eviction என அறிவித்திருந்தார் விஜய் சேதுபதி.

இதையடுத்து சத்யா captaincy-யில் போன வாரம் பிக்பாஸ் வீடு நகர தொடங்கியது. மேலும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் "கடந்து வந்த பாதை" குறித்தும் பேசி இருந்தனர். அத்துடன் nomination free-க்காக நடைபெற்ற டாஸ்கில் முதன்முறையாக ஆண்கள் அணியினர் வெற்றி பெற்ற, இதன் மூலம் ரஞ்சித் nomination-ல் இருந்து save செய்யப்பட்டார். மேலும், மொட்டை கடிதாசி போடுதல், morning activity-யாக manners, styling and grooming பற்றி போட்டியாளர்களுக்கு விவரித்தல், இதன் தொடர்ச்சியாக பெண்கள் வீட்டார் ஆண்களுக்கு style செய்து விடுவது போன்ற டாஸ்குகள் நடைபெற்றன. அத்துடன் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்ய நடைபெற்ற தலைவனா, தலைவியா டாஸ்கில் ஆண்கள் அணியில் இருந்து அருண் வெற்றி பெற்று இந்த வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...

இதையடுத்து வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திக்க வந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி பட்ட பெயர் வைக்கிறது, மொட்டை கடிதாசி போடறது, கதை சொல்லுறது, போராட்டம் பண்ணுறதுனு வீட்டுக்குள்ள நிறைய விளையாட்டு விளையாண்ட அவுங்கள என்னனு போய் கேப்போமே என கூறி போட்டியாளர்களை சந்தித்தார். வீட்டில் பழைய போட்டியாளர்களிடமும் அதன் தொடர்ச்சியாக wild card போட்டியாளர்களிடமும் தனது விசாரணையை தொடங்கினார் விஜய் சேதுபதி.

இதில் எல்லோருமே வேஸ்ட் என தொடங்கிய பழைய போட்டியாளர்களின் வாக்கெடுப்பில் இறுதியில் சிவக்குமார், ரயான், மஞ்சரி ஆகிய மூன்று பேர் மீதும் நல்லவிதமான கமெண்டுகள் வந்தன. ஆனால், ரியா, ராணவ், வர்ஷினி ஆகியோர் மீது நெகட்டிவ் கமெண்டுகள்தான் வந்திருந்தது.

நெகடிவ் கமெண்ட்ஸ் வாங்கிய மூவரையும் தனித்தனியாக விசாரித்தார் விஜய் சேதுபதி. இதில், ராணவும், வர்ஷினியும் சற்று மாதமாகவே உள்ளனர். ஆனால், கொடுத்த டாஸ்கில் ஜெயிச்சிருக்கேன், கிச்சன்ல சரியா வேலை பார்த்தேன், பாயின்ட்ஸ் கொடுத்திருக்கேன் நான் சரியாகதான் விளையாண்டேன் என்று தனது தரப்பில் இருக்கும் நியாயங்களை முன் வைத்தார் ரியா.

இதையடுத்து பெண்கள் அணியிடம் கேள்வி கேட்ட விஜய் சேதுபதி இப்பத்தான் லிவ்விங் ஏரியா.. உங்க உரிமைன்னு தோணிச்சி என கேட்டார். இதற்கு பதில் அளித்த தர்ஷிகா, ஆண்கள் அணி பெண்கள் அணிக்கு அதிகம் டாஸ்குகள் குடுக்குறாங்க ஆனா நாங்க டாஸ்க் சொன்ன அதை ஸ்போர்டிவ்வா எடுத்துக்கலை, இரண்டு நாட்கள் இழுத்துருச்சு என கூறினார். இது குறித்து ஆண்கள் அணியிடம் விசாரித்த விஜய் சேதுபதி இறுதியில் இது ஒரு சாதாரண டாஸ்க். இதை ஜாலியா பண்ணி.. கேமை சுவாரசியமா மாத்தியிருக்கலாம் என ஆண்கள் அணிக்கு அறிவுரை கூறினார்.

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...

இதையடுத்து, கடந்து வந்த பாதை டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ஒருத்தரைப் பத்திய அபிப்ராயம், அவங்களோட கதையைக் கேட்ட அப்புறம் மாறிடும், அதுபோல நிறைய கதைகள் டச்சிங்கா இருந்துச்சு என கூறியதுடன் முத்து,உங்களோட middle class ரோஷம் எனக்கு connect ஆச்சு என கூறினார். மேலும் தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஜாக்குலின் தனது பள்ளி பருவத்தில் எடுத்த முடிவுகள் குறித்து பாராட்டினார். அத்துடன் தர்ஷிகாவையும் அழைத்து பாராட்டி இருந்தார்.

வார நாட்களில் நடந்த சம்பவங்கள் குறித்தும் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார் விஜய் சேதுபதி. அதில் முதலாவதாக, திருடன் விளையாட்டில் தீபக்கிற்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். இதில் சவுந்தர்யாவிற்கு ஆதரவாக பேசிய ஜாக்குலின் என்ன படிச்சிருக்கீங்க என்பது போன்ற வார்த்தைகள் மிகவும் மனதை புண்படுத்துவதாக கூறினார். இதற்கு விளக்கமளித்த தீபக் நான் ரூடா சொல்றதுதான் உங்களுக்குத் தெரியுது. அதுல இருக்கற நல்லது தெரியல. கத்துக்கொடுக்க ஆள் இல்லைன்னு சொல்றீங்கள்லா.. ஒரு அண்ணனா நான் சொல்லித் தரேன் என்று கூற நடுவில் பேசிய விஜய் சேதுபதி கத்துக் குடுக்கற பாணின்னு ஒண்ணு இருக்கு, அது காயப்படுத்துற மாதிரி இருக்க கூட என தீபக்கிற்கு எடுத்துரைத்தார்.

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...

அடுத்ததாக “நீ படிச்சவதானே.. சாரி கட்டிட்டு ஏன் இப்படி உக்காந்திருக்கே என்று சௌந்தர்யாவின் போராட்டத்தில் சத்தியா பேசிய விதம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், சத்தியாவிடம் விளக்கம் கேட்ட விஜய் சேதுபதி, படிப்பிற்கும் சாரி கட்டிட்டு உக்கார்றதுக்கும் என்ன சம்பந்தம்..? தன் உரிமைக்காக ஒருத்தர் போராடக்கூடாதா? என கேள்வி எழுப்ப, awkward ஆ இருந்தது என சத்யா சொன்ன பதில் ஆணாதிக்கத்தன்மையுடனே அமைந்திருந்தது. இது குறித்து பெண்கள் அணியிடமும் விளக்கம் கேட்டு தனது சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொண்டார் விஜய் சேதுபதி. மேலும் உங்க வார்த்தையில உடன்பாடு இல்லை சத்யா அந்த வார்த்தையோ அந்த கண்ணோட்டமோ தவறு என கூறி இனி வரும் வாரங்களில் தவறுகளை திருத்திக்கொள்ளும்படி அறிவுரைக்கூறினார்.

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...

இதன் தொடர்ச்சியாக eviction process இறுதிக்கட்டத்திற்கு வந்தது. இதில் ஆனந்தியும், சுனிதாவும் மீதம் இருக்கவே சுனிதா evict செய்யப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார். வெளியில் வந்து விஜய் சேதுபதியை சந்தித்த சுனிதாவிடம் this is not your house this is our house னு சொல்லி எல்லா இடத்துலயும் சரியான points எடுத்து வச்சிங்க, ரொம்ப original-ஆ, matured-ஆ இருக்கீங்க உங்களுக்கு தோத்து போறதுலாம் இல்ல always success only என கூறி வாழ்த்தி அனுப்ப, மக்களிடம் மிக மிக நன்றி என கூறி விடை பெற்றார் சுனிதா.

BB 8 - Awkward ஆ இருந்தது : சௌந்தர்யா குறித்து சத்யா சர்ச்சை பேச்சு : வறுத்தெடுத்த விஜய் சேதுபதி...

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நிமினேஷன் பிராஸஸ் நடைபெற்றுள்ளது. இதில், தீபக் சௌந்தர்யா, ராணவ், ரஞ்சித், சத்யா, ஜெஃப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, ஜகுலின், ரியா மற்றும் சாச்சனா ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

- சீ . ரம்யா

banner

Related Stories

Related Stories