சினிமா

ஃபார்முலா 4 கார் பந்தயம் : "சென்னையின் அந்தஸ்தை உயர்த்தும்"... தமிழ்நாடு அரசுக்கு பிரபலங்கள் வாழ்த்து !

ஃபார்முலா 4 கார் பந்தயம் : "சென்னையின் அந்தஸ்தை உயர்த்தும்"... தமிழ்நாடு அரசுக்கு பிரபலங்கள் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 31ம் மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கார் பந்தயம் காரணமாக தமிழ்நாட்டில் கார் பந்தைய விளையாட்டு பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்தயத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் முதல் ஆன் ஸ்ட்ரீட் நைட் எஃப்4 சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் இப்பொது நடைபெறவுள்ளது. இந்த செயல் சென்னையின் அந்தஸ்தை இன்னும் உயர்த்தும்.. வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் ப்ரோ" என்று கூறியுள்ளார்.

ஃபார்முலா 4 கார் பந்தயம் : "சென்னையின் அந்தஸ்தை உயர்த்தும்"... தமிழ்நாடு அரசுக்கு பிரபலங்கள் வாழ்த்து !

அதே போல “தெற்காசியாவின் முதல் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைக்கு அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, “இந்திய மோட்டார்ஸ்போர்ட்டின் வரலாற்று தருணம் இது. சென்னையில் நடைபெறும் ஃபார்முலா4 கார் பந்தய போட்டிய முன்னின்று நடத்திய வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். விறுவிறுப்பான விளையாட்டுப் போட்டிகள் மூலம் விளையாட்டரங்கில் சென்னை முதன்மை இடமாக உலக வரைபடத்தில் இடம் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories