அரசியல்

கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாஜகவின் செயலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தீக்கதிர் தலையங்கம் !

கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாஜகவின் செயலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தீக்கதிர் தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்திவைத்துள்ளது. இதற்கு முதலமைசார் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதியை நிறுத்தி நிர்ப்பந்திப்பதா? என்று தீக்கதிர் தலையங்கத்தில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்த தீக்கதிர் தலையங்கத்தில், "தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்தால் கல்விக்கான நிதியை நிறுத்துவோம் என தமிழ கத்தை ஒன்றிய அரசு மறைமுகமாக நிர்ப் பந்திப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமர்க் கார சிக்ச அபியான்) கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்குத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முதல் கட்ட நிதி ரூ. 573 கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாஜகவின் செயலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தீக்கதிர் தலையங்கம் !

இத்திட்டத்தின் முதன்மை நோக்கமே அடிப்படைக் கல்வி தேவையை உறுதிப்படுத்துவதே ஆகும். அதற்கான திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் சமர்ப்பிக்கும் போது அதனை ஒன்றிய அரசின் ரைசிங் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள திட்ட ஒப்புதல் வாரியம் ஒப்புதல் அளிக்கும். அதன்படி 2024- 25 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு ரூ 3,586 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

அதில் ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ. 2,152 கோடியில், முதல் தவணையாக ரூ. 573 கோடியை ஜூன் மாத்திலேயே விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. மாறாக பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது.

பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் படி புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் உடனே விடுவிக்கப்படும் என முன்நிபந்தனை விதிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இதே போல் கடந்த 2023- 24 ஆம் நிதியாண்டிற்கான ரூ. 249 கோடியையும் இதுவரை விடுவிக்கவில்லை. இது ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத மற்றும் அப்பட்டமான எதேச்சதிகார நடவடிக்கையாகும்.

கல்வியை காவிமயமாக்கத் துடிக்கும் பாஜகவின் செயலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தீக்கதிர் தலையங்கம் !

தேசியக் கல்விக் கொள்கை 2020 கால அட்டவணைப்படி 2030-க்குள் தற்போது உள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதாகும். அதற்காக மாநில அரசுகளை பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி; படிப்படியாகத் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் முதன்மை நோக்கம் மாநில அரசுகளால் சமூகநீதியின் அடிப்படையில் உருவான கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதே ஆகும்.

இதன் ஆபத்துக்களை உணர்ந்தே இத்திட்டத்தில் தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இதுவரை இணையவில்லை. ஏற்கனவே தமிழகம் பிஎம் ஸ்ரீ திட்டத் தில் சேர மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தது. அதைக் கூட ஒன்றிய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. இதில் மாநில அரசுகளின் உரிமைகளும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமையை அடியோடு பறித்து ஒட்டு மொத்த கல்வியையும் காவிமயமாக்கத் துடிக்கிறது. இதனை ஒரு போதும் தமிழகம் ஏற்காது"என அதில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories