சினிமா

”கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும்” : இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

”கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும்” : இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'வாழை' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்லையில் திரையரங்கம் ஒன்றில் மக்களுடன் சேர்ந்து முதல் காட்சியை இயக்குநர் கண்டுகளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ், "வாழை திரைப்படத்திற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல மனிதர்களின் கதைகளும் எளியோர்களின் வலியும் என்றும் தோற்காது. காலம் கடந்தாலும் என்றாவது ஒருநாள் வெற்றியை பெற்றே தீரும் என்பதற்கு வாழை திரைப்படம் ஒரு உதாரணம். கதையில் உண்மை இருந்தால் அது மக்களை சென்றடையும்.

இப்படத்தில் நடித்துள்ள மண்ணின் மைந்தர்கள் அர்ப்பணிப்புடன் பணி செய்துள்ளனர். மண் சார்ந்த மக்கள் திறமையையும் நடிப்பையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. தனுசுடன் அடுத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories