சினிமா

Oscar 2024 : சிறந்த படம் முதல் துணை நடிகர் வரை... 7 விருதுகளை அள்ளிய Oppenheimer.. எந்தெந்த பிரிவு?

சிறந்த படம் உள்ளிட்ட 7 Oscar விருதுகளை Oppenheimer திரைப்படம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Oscar 2024 : சிறந்த படம் முதல் துணை நடிகர் வரை... 7 விருதுகளை அள்ளிய Oppenheimer.. எந்தெந்த பிரிவு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் Oscar விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருந்தானது உலகம் முழுவதுமுள்ள படங்கள், அதன் வேலைகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிறந்தவை எது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும். கடந்த ஆண்டு கூட RRR திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு.." பாடல் Oscar விருதை வென்றது. மேலும் சிறந்த ஆவணப்படமாக The Elephant Whisperers விருதை வென்றது.

இந்த நிலையில் இந்தாண்டுகான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் Oppenheimer திரைப்படம் மட்டுமே 7 பிரிவுகளின் கீழ் விருதை வென்றுள்ளது. ஒரே படம் 7 விருதுகளை வென்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Oscar 2024 : சிறந்த படம் முதல் துணை நடிகர் வரை... 7 விருதுகளை அள்ளிய Oppenheimer.. எந்தெந்த பிரிவு?

பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம்தான் 'Oppenheimer'. அணுகுண்டு தொடர்பான உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படமானது, உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 180 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட இந்த படம், 960 மில்லியன் டாலர் வசூலித்து, 2023-ம் வெளியான உலகின் அதிக வசூல் செய்த படத்தின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

Oscar 2024 : சிறந்த படம் முதல் துணை நடிகர் வரை... 7 விருதுகளை அள்ளிய Oppenheimer.. எந்தெந்த பிரிவு?

இதன் பல்வேறு உருவாக்கங்கள் திரை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இதனால் பல விருதுகளை இந்த படம் வென்ற நிலையில், Oscar விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி தற்போது இந்த படம் 1 அல்ல, 2 அல்ல 7 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. எந்தெந்த பிரிவுகளின் கீழ் விருது என்பது பின்வருமாறு :

1. சிறந்த படம் - ஓப்பன்ஹைமர் (Oppenheimer)

2. சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன்

3. சிறந்த நடிகர் - கில்லியன் மர்பி

4. சிறந்த துணை நடிகர் - ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர்

5. சிறந்த ஒளிப்பதிவு - Hoyte van Hoytema

6. சிறந்த இசை- Ludwig Göransson

7. சிறந்த எடிட்டிங் - Jennifer Lame - ஆகும். இதில் இதுவரை Oscar விருதுக்கு 8 முறை பரிந்துரை செய்யப்பட்டு, முதல் முறை விருதை வென்றுள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories