கேரள மாநில மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் இந்திரன்ஸ். இவர் குடும்ப சூழ்நிலைக் காரணமாகத் தனது பள்ளிப் படிப்பை 8 ஆம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார்.
பிறகு பீடி தொழிலாளியாகவும், கட்டுமான தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்த இந்திரன்ஸ் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரின் நடிப்பைப் பார்த்து 1981ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலிருந்து 40க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், முன் இருந்த பொருளாதாரத்தை விட தற்போது நன்றாக இருந்தாலும் கல்வி கற்காமல் பாதியிலேயே விட்டுவிட்டோமே என இவருக்கு ஒரு சின்ன வருந்தம் இருந்துள்ளது.
இந்த வருத்தத்தை போக்கக் கேரள அரசின் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தனது 67வது வயதில் 10 ஆம் வகுப்பு படிக்கச் சேர்ந்துள்ளார். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் நடந்து வரும் சமத்துவ வகுப்பில் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கும் வகுப்பில் கலந்து கொண்டு படித்து வருகிறார். மேலும் இந்திரன்ஸ் கேரள மாநில அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் தூதராக நடிகர் இந்திரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட கல்வி அவசியம் இல்லை என சில கூறி வரும் நிலையில் கல்விதான் அசைக்க முடியாது சொத்து என்பதை மீண்டும் தனது நடவடிக்கை மூலம் நிரூபித்துள்ளார் நடிகர் இந்திரன்ஸ்.