சினிமா

“என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்..” - இயக்குநர் சித்தக் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கம் !

இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா அறிக்கை வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

“என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்..” - இயக்குநர் சித்தக் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் சித்திக். கடந்த 1989-ல் மலையாளத்தில் வெளியான 'Ramji Rao Speaking’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தமிழில் 2001-ம் ஆண்டு வெளியான ‘Friends’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

“என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்..” - இயக்குநர் சித்தக் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கம் !

விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படம் விஜய், சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த படமானது சூர்யாவின் 7-வது படமாகும். சூர்யாவின் திரைப்பயணத்தில் இன்றளவும் நின்று பேசும் ஒரு படமாக இந்த படம் விளங்கிறது. இவரது முதல் படம் ஹிட் கொடுத்த நிலையில், விஜய் காந்தை வைத்து ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’, ‘காவலன், ஆகிய படங்களை இயக்கினார். இருப்பினும் இவர் மலையாலத்திலே பிரதான படங்களை இயக்கினார்.

“என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்..” - இயக்குநர் சித்தக் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கம் !

இந்த சூழலில் இவருக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா நீண்ட அறிக்கை வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அது பின் வருமாறு : "நினைவுகள் விரைகின்றன, என் இதயம் கனமாக இருக்கிறது. சித்திக் சாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன்.

“என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார்..” - இயக்குநர் சித்தக் மறைவுக்கு நடிகர் சூர்யா உருக்கம் !

எனக்கு திரை வாழ்க்கையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் முக்கிய படமாக அமைந்தது. சித்திக் சார் இயல்பாகவே ஒரு ஊக்கமளிக்கும் மனிதர், நடிகர்கள் நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் அவர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பின் போதும் சரி, எடிட் செய்யும் போதும் சரி, எனது நடிப்பு குறித்து அவரது கருத்தை அன்புடன் தெரிவிப்பார். முதன்முறையாக நான் ஒரு படத்தொகுப்பில் இருப்பதை எதிர்பார்த்தேன்! திரைப்படத் தயாரிப்பின் செயல்முறையை ரசிக்கவும், நன்றாகச் சிரிக்கவும், என்னைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

சித்திக் சார் ஒரு மூத்த இயக்குநராக இருந்தார், அவர் 'ப்ரண்ட்ஸ்' படத்தை உருவாக்கியபோது மிகவும் பாராட்டப்பட்டார். அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது எங்கள் அனைவரையும் சமமாக நடத்தினார். படப்பிடிப்பில் அவர் கோபமாகவோ குரலை உயர்த்தியோ நான் பார்த்ததில்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் நான் விரும்பும் அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள் நம்பிக்கையை அவர் கொடுத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் எங்கு சந்தித்தாலும், மிகுந்த கவனத்துடன் என் குடும்பம் மற்றும் எனது மகிழ்ச்சியைப் பற்றி விசாரிப்பார்.

நடிகராக நான் உருவாகும் ஆண்டுகளில் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி சித்திக் சார். நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களைச் சுற்றி இல்லாததால் ஏற்படும் உடல் இழப்பைத் தாங்கிக் கொண்டு அவர்கள் அமைதியைக் காண பிரார்த்திக்கிறேன். இருப்பினும், நீங்கள் எங்களுக்கு அளித்த நினைவுகளும் அன்பும், எங்கள் முன்னோக்கிய பயணத்தில் எங்களை அழைத்துச் செல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories