சினிமா

“ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி..” - ரத்தினவேலுவுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து !

நடிகர் பகத் பாசில் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி..” - ரத்தினவேலுவுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தின் முன்னணி நடிகராக விளங்குபவர் பகத் பாசில். மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தமிழில் 2017-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்' படத்தில் அறிமுகமானார். அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த இவர் கோலிவுட்டில் பிரபலமாக காணப்பட்டார். தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த இவருக்கு திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். விக்ரம் படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்று தந்தது. இதனைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' படத்தில் ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

“ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி..” - ரத்தினவேலுவுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து !

இந்த படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரமாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது கோலிவுட்டின் ராட்சசன் என்று ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து இவரது கைவசம், புஷ்பா 2, பாட்டு என்று வரிசையாக படங்கள் உள்ளது.

இந்த சூழலில் இவர் தனது 40-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு மக்களிடம் ரத்தினவேலுவாக இருக்கும் பகத்துக்கு, மாரி செல்வராஜ் தனது பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி..” - ரத்தினவேலுவுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம் பகத் சார்!!!.. உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories