நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் 'ஜெயிலர்'. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ட்ரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெளியானது.
தற்போது வரை ட்ரெண்டிங் நம்பர் 1-ல் இருக்கும் இந்த ட்ரைலர், சுமார் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ட்ரைலரில் பாட்ஷா பாணியில் அதிக சீன்கள் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட் கொடுப்பதோடு, விடுமுறையும் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த Uno Aqua Care என்ற நிறுவனம் தங்கல் ஊழியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கு ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜெயிலர்' படத்தின் வெளியீடு நாளான ஆகஸ்ட் 10-ம் தேதி விடுமுறை அளிப்பதோடு, அவர்களுக்கு இலவச டிக்கெட்டையும் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. இது ரஜினி ரசிகர்களை பெரும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வெளியாகும் அதே நாளில் மலையாள படமான ‘ஜெயிலர்’ படமும் வெளியாகவுள்ளது. எனவே இந்த படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.