சினிமா

சுதந்திர போராட்ட வீரர் ‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ட்ரைலர் & ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர்

சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான 'கக்கன்' திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் டிரைலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சுதந்திர போராட்ட வீரர் ‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ட்ரைலர் & ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தியாகி பி. கக்கன் பற்றி, சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த ஜோசப் பேபி தயாரித்து வழங்கும் 'கக்கன்' திரைப்பட ஒலிநாடா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள சிற்றரங்கத்தில் இன்று நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர் ‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ட்ரைலர் & ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர்

இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு 'கக்கன்' திரைப்பட இசை மற்றும் டிரைலரை வெளியிட்டார்.

ஒலிநாடாவை, தியாகி கக்கனின் பேத்தி சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர். எஸ். ராஜேஸ்வரி, ஐ.பி.எஸ். பெற்றுக் கொண்டனர். மேலும், கக்கன் திரைப்பட நடிகர் ஜோசப் பேபி, இசையமைப்பாளர் தேவா, பாடலாசிரியர் ஏகாதசி, இயக்குனர்கள் பிரபு மாணிக்கம், ராகோத் விஜய், படைப்பாக்க இயக்குநர் ஏ.எஸ்.சந்தோஷ் ராமா ஆகியோருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினர்.

சுதந்திர போராட்ட வீரர் ‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ட்ரைலர் & ஒலிநாடாவை வெளியிட்டார் முதலமைச்சர்

மேலும் இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ‌.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., ஊடகப் பிரிவு மாநில தலைவர் அசன் மெளலானா, அசன் மெளலானா எம்.எல்.ஏ., எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், துணைத் தலைவர்கள் இமயா கக்கன், பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம், தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் டில்லி பாபு, நிர்வாகிகள் அரும்பாக்கம் வீரபாண்டியன், சுமதி அன்பரசு, உமா பாலன், கடல் தமிழ்வாணண், ஆயிரம் விளக்கு ரஞ்சித், முகப்பேர் பிரபாகரன், வினோத், விக்ரம், அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்காலச் சூழலில் கக்கனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories