சினிமா

ஆக.10: ஜெயிலருடன் நேரடியாக மோதும் ஜெயிலர்.. ஒரே நாளில் 2 படங்கள்.. வெடித்த Title சர்ச்சை - பின்னணி என்ன?

ஒரே நாளில் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெவ்வேறு நடிகர்களை கொண்டு ஜெயிலர் என்ற பெயரில் படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக.10: ஜெயிலருடன் நேரடியாக மோதும் ஜெயிலர்.. ஒரே நாளில் 2 படங்கள்.. வெடித்த Title சர்ச்சை - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜயின் 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சன், ரஜினியை வைத்து படத்தை இயக்குகிறார்.

ரஜினியின் 169-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்துக்கு ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி 80'ஸ் லுக்கில் வருகிறார். மேலும் ரஜினியுடன் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு என பலரும் நடித்து வருகின்றனர்.

ஆக.10: ஜெயிலருடன் நேரடியாக மோதும் ஜெயிலர்.. ஒரே நாளில் 2 படங்கள்.. வெடித்த Title சர்ச்சை - பின்னணி என்ன?

தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா..' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடலான "Hukum tiger ka hukum.." என்ற பாடல் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆக.10: ஜெயிலருடன் நேரடியாக மோதும் ஜெயிலர்.. ஒரே நாளில் 2 படங்கள்.. வெடித்த Title சர்ச்சை - பின்னணி என்ன?

இந்த படமானது வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு கடந்த மே மாதம் 4-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் 'அயலான்', ஷாருக்கின் 'ஜவான்' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகவுள்ள அதே தேதியில் மலையாள படமான ஜெயிலர் படமும் வெளியாகவுள்ளது.

ஆக.10: ஜெயிலருடன் நேரடியாக மோதும் ஜெயிலர்.. ஒரே நாளில் 2 படங்கள்.. வெடித்த Title சர்ச்சை - பின்னணி என்ன?

மலையாள இயக்குநர் சாக்கிர் மடத்தில் இயக்கத்தில் தயன் சீனிவாசன் நடிப்பில் உருவாகும் இந்த ‘ஜெயிலர்’ படமானது சிறையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கைதிகள் தப்பித்து செல்வது தொடரபான கதையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளாது. அதன்படி இந்த படமும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ள அதே தேதியான ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தற்போது டைட்டிலே சர்ச்சை எழுந்துள்ளது. ஏனெனில் 'ஜெயிலர்' என்ற படம் டைட்டில் உரிமையை முதலில் யார் கைப்பற்றியது என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

ஆக.10: ஜெயிலருடன் நேரடியாக மோதும் ஜெயிலர்.. ஒரே நாளில் 2 படங்கள்.. வெடித்த Title சர்ச்சை - பின்னணி என்ன?

இந்த விவகாரம் குறித்து மலையாள ஜெயிலர் படக்குழு, தாங்கள் 2021-ம் ஆண்டு கேரள திரைப்பட வர்த்தக சபையில் (KFCC) 'ஜெயிலர்' டைட்டில் உரிமையை கைப்பற்றி விட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தலைப்பை மாற்றுமாறு ரஜினியின் ஜெயிலர் படக்குழுவுக்கு தாங்கள் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அதனை நிராகரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனினும் இந்த 2 படங்கள் வெளியாக இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் யார் தட்டி செல்ல போகின்றனர் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்துள்ளது. இந்த டைட்டில் சர்ச்சையால் தற்போது ரஜினி படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories