>> லதா மங்கேஷ்கர் : பிப்ரவரி 6
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள இவர், பாரத் ரத்னா, பத்மபூஷன் மற்றும் மத்மவிபூஷன் உட்பட ஏராளமான உரிய விருதுகளை பெற்றுள்ளார். உடல்நல பிரச்னை காணமாக தனது 92 வயதில் உயிரிழந்தார்.
>> கிருஷ்ணகுமார் குன்னத் (KK) : மே 31
கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி இசை பாடகரான இவர், இந்திய மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தமிழில் காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட 66 பாடல்களை பாடி, ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்தார்.
இந்நிலையில், தனது 53-வது வயதில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
>> நடிகர் பூ ராமு : ஜூன் 27
குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்ட இவர், முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினராவும் இருந்து வந்தார். பூ, நீர்பறவை, தங்க மீன்கள், கர்ணன், சூரரைப் போற்று பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தனது இதய கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
>> நடிகர் ராமராஜ் : 11 ஜூலை
'அவன் இவன்' திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக நடித்த நடிகர் ராமராஜ் தனது 72 வயதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு காலமானார். இராமதபுரத்தை சேர்ந்த இவர், கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தவர்.
>> நடிகர் பிரதாப் போத்தன் : 15 ஜூலை
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழில் மை டியர் மார்த்தாண்டன்', 'சீவலப்பேரி பாண்டி', 'லக்கி மேன்', 'படிக்காதவன்', 'பொன்மகள் வந்தாள்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தனது 69-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
>> VJ கௌஷிக் - 15 ஆகஸ்ட்
சமூக வலைதளங்கள் மூலம் சினிமா செய்திகள், சினிமா அறிவிப்புகள், விமர்சனங்கள் போன்ற சினிமா சார்ந்த தகவல்களை ரசிகர்களுக்கு கூறிவருபவர் கௌஷிக். இவர் தனது 36 வயதில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
>> நெல்லை கண்ணன் : ஆகஸ்ட் 18
தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன், தனது 77 வயதில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், காமராஜர், பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட பெரிய ஆளுமைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தவர் ஆவர்.
>> எஸ்.வி.ரமணன் (அனிருத் தாத்தா) : 26 செப்டம்பர்
தமிழில் பிரபல பழபெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமாக வலம் வந்தவர் தான் கே சுப்பிரமணியமின் மகனான எஸ்.வி.ரமணன், சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அனிருத் இவரது பேரன் ஆவார். வயது மூப்பின் காரணமாக தனது 87-வது காலமானார்
>> கலை இயக்குநர் சந்தானம் : 23 அக்டோபர்
ஆயிரத்தில் ஒருவன், தெய்வ திருமகள், இறுதி சுற்று, சர்க்கார், தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய இவர், மாரடைப்பு காரணமாக காலமானார்.
>> சீரியல் நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி : நவம்பர் 11
இந்தி தொடர்களில் நடித்து வந்த இவர், வழக்கம்போல ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> சிவநாராயண மூர்த்தி : 07 டிசம்பர்
தமிழில் ரஜினி, அஜித், விஜய், வடிவேலு உள்ளிட்ட நடிகர்களோடு சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், உடல் நலக்குறைவால் தனது 67 வயதில் காலமானார்.
>> சீரியல் இயக்குநர் தாய் செல்வம் : 15 டிசம்பர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் கொடுத்த மெளன ராகம் 1, நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, கல்யாணம் முதல் காதல் வரை, தாயுமானவன், பாவம் கணேசன் உள்ளிட்ட பல தொடர்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தார்.