சினிமா

"ஆக்கிலஸ் ரிப்பாரோ.." - ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி.. வாங்க போட்டா போட்டி போடும் ரசிகர்கள்..

ஹாரி பாட்டர் படத்தில் ஹாரியாக நடித்த கதாநாயகன் பயன்படுத்திய கண்ணாடிகள் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

"ஆக்கிலஸ் ரிப்பாரோ.." - ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி.. வாங்க போட்டா போட்டி போடும் ரசிகர்கள்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹாரி பாட்டர் படத்தில் ஹாரியாக நடித்த கதாநாயகன் பயன்படுத்திய கண்ணாடிகள் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

90'ஸ் கிட்ஸ்களின் பிடித்த ஒரு காமிக் என்றால் அதில் முதலில் இருப்பது 'ஹாரி பாட்டர்' தான். மாய உலகில் நடக்கும் விஷயங்களை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள். ஜெ.கே.ரெளலிங்க் கைவண்ணத்தில் உருவான இந்த கதை முதலில் நாவலாக தான் இருந்தது.

"ஆக்கிலஸ் ரிப்பாரோ.." - ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி.. வாங்க போட்டா போட்டி போடும் ரசிகர்கள்..

பின்னர் இதனை நாடக மேடையில் அரங்கேற்றினர். அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இது வரவேற்பை பெற்றதால், இதனை படமாக எடுக்க திட்டமிட்டனர். அதன் படி இது படமாக்கப்பட்டது. தற்போது இருக்கும் உலகம் போன்று, வேறொரு இடத்தில் மாய உலகம் இருப்பதாகவும், அதில் நடக்கும் இன்னல்களை ஹீரோ எதிர்கொண்டு வில்லனை தோற்கடிப்பதும் கதையாக அமைந்துள்ளது.

மொத்தம் 7 பகுதிகளாக வெளியான நாவலை அப்படியே படமாக ஆக்கப்பட்டது. இதில் முதல் 2 பகுதிகளை கிரிஸ் கொலம்பஸ், 3-ம் பகுதியை அல்பான்ஸோ கெளரா, 4-ம் பகுதியை மைக் நெவல், 5-ல் இருந்து 8-ம் பகுதி வரை டேவிட் யாட்ஸ் என மொத்தம் 4 இயக்குநர்கள் இயக்குனர்.

"ஆக்கிலஸ் ரிப்பாரோ.." - ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி.. வாங்க போட்டா போட்டி போடும் ரசிகர்கள்..

8 பகுதிகளாக எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 2011-ல் இப்படத்தின் முதல் பாகம் வெளியானாலும், இன்றளவும் இந்த படம் தலைசிறந்து காணப்படுகிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களும் நிலைத்து நிற்கிறது.

அதிலும் ஹாரி பாட்டராக நடித்திருக்கும் கதாநாயகன் Daniel Jacob Radcliffe பயன்படுத்திய கண்ணாடி வட்ட வடிவில் இருக்கும். இந்த படம் வந்த புதிதில் இது போன்ற கண்ணாடியை ரசிகர்கள் பொதுமக்கள் வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். மேலும் மேஜிக் குச்சி, பறக்கும் துடைப்பம் உள்ளிட்டவை மிகவும் பிரபலமாக திகழ்ந்தது.

"ஆக்கிலஸ் ரிப்பாரோ.." - ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி.. வாங்க போட்டா போட்டி போடும் ரசிகர்கள்..

இந்த நிலையில், இந்த படத்தில் ஹாரி பாட்டராக நடித்திருக்கும் கதாநாயகன் Daniel Jacob Radcliffe பயன்படுத்திய கண்ணாடிகள் ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நியூ யார்க் போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, "20,000 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ.18,65,511) ஏலம் அறிவிக்கப்படவுள்ளது. ஹாரி பாட்டர் பயன்படுத்திய கண்ணாடி அப்போது 114 பவுண்டுக்கு வாங்கப்பட்டது.

படத்திற்காக தயாரிக்கப்பட்ட பல ஜோடி கண்ணாடிகளில் இதுவும் ஒன்று. மூக்கு தட்டுகள் இல்லாமல் கருப்பு மேட் பூச்சுகளில் பார்டர் செய்யப்பட்டுள்ளது. சில்வர் மெட்டல் இயர்பீஸ் தெளிவான பிளாஸ்டிக்குடன் முனையப்பட்டுள்ளது. ஒரு ஜோடி பழுப்பு நிற பிளாஸ்டிக் காது குறிப்புகள் மற்றும் படத்தின் நகலும் சேர்க்கப்பட்டுள்ளது" என்று கண்ணாடி குறித்து விளக்கியுள்ளது.

"ஆக்கிலஸ் ரிப்பாரோ.." - ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டரின் கண்ணாடி.. வாங்க போட்டா போட்டி போடும் ரசிகர்கள்..

மேலும் "இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் பெயரால் 'NHS (National Health Service) ஸ்டைல்' என்று அழைக்கப்படுகின்றன. உலகளாவிய அடையாளமாக மாறுவதற்கு முன்பு அவை 114 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டன" என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே 'ஹாரி பாட்டர்' புத்தகத் தொடர் வெளியாகி இந்த ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்தன. ஜே.கே.ரௌலிங்கின் ஹாரி பாட்டர் தொடரின் முதல் புத்தகம், 'ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்', 1997 இல் வெளியிடப்பட்டது. ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங்கால் வெளியிடப்பட்டது, இந்தத் தொடர் எல்லா காலத்திலும் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றாக மாறியது.

royal mint's harry potter coins
royal mint's harry potter coins

கடந்த மாதம், இந்த மாயாஜால தொடரின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், ராயல் மின்ட் 50p ஹாரி பாட்டர் நாணயங்களின் சிறப்பு தொகுப்பையும் அறிமுகப்படுத்தியது. சேகரிப்பில் நான்கு நாணயங்கள் உள்ளன, அவை ஹாரி பாட்டர் தொடரை விளக்கிய ஜிம் கேயால் விளக்கப்பட்டுள்ளன.

நாணயங்களில் ஹாரி பாட்டர் மட்டுமல்ல, ஆல்பஸ் டம்பில்டோர், ஹாக்வார்ட்ஸ் ஸ்கூல் ஆஃப் விச்கிராஃப்ட் அண்ட் விஸார்ட்ரி மற்றும் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories