பிரபல காமெடி நடிகர் வடிவேலு, முதல் முறையாக வில்லனாக தமிழ் திரையில் களமிறங்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமானவர் தான் நடிகர் வடிவேலு. அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் காமெடி, குணச்சித்திர வேடத்தில் நடித்த இவர், 'போடா போடா புண்ணாக்கு', 'எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும்..' என்ற பாடலில் மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.
கரத்த குரலில் இவர் பாடினாலும், இவரது குரலுக்கும் ரசிகர்கள் குவிந்தனர். அதன் பின்னர், பல படங்களில் ரஜினி, விஜய், அஜித், விஜய், கமல், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னனி ஹீரோக்களுடன் காமெடி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து புகழ் மேல் புகழ் பெற்றார். இதையடுத்து பெரிய அளவில் பெயர் கொடுத்து இன்றும் நிலைத்து நிற்கும் படமான 'இம்சை அரசின் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன்பின்னர் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அது அவருக்கு பெரிதாக பெயர் ஈட்டிக்கொடுக்கவில்லை. எனவே மீண்டும் காமெடி தளத்தில் இருந்தார். கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினி உலகில் நீடித்து இருக்கும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னை காரணமாக திரையில் தோன்றாமல் இருந்தார். அதன்பின்னர் மீண்டும் தோன்ற தொடங்கியுள்ளார்.
தற்போது அவர் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', உதயநிதி நடிப்பில் வெளியாகவுள்ள 'மாமன்னன்', ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்காத இடைப்பட்ட காலகட்டத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை 'மீம்ஸ் நாயகனாக' மாற்றினர்.
அவரது காமெடி டயலாக், ரியாக்ஷன் உள்ளிட்டவற்றை மீம்ஸ் ஆகவும், எமோஜி டேம்ப்லேட்டாகவும் பயன்படுத்தி அவர் திரையில் தோன்றாத குறைகளை பூர்த்தி செய்தார். இதனால் 80'ஸ் 90'ஸ் கிட்ஸ்களின் விருப்பமான நடிகராக இருந்த இவர், 2கே கிட்ஸ்களுக்கும் விருப்பமான நடிகராக மாறினார்.
காமெடியில் தனக்கென தனி பாதையை அமைத்து கொண்ட வடிவேலு, 35 வருடங்களில் முதல் முறையாக 'வில்லன்' கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார்.
அந்த படத்தில் நடிகர் வடிவேலுவை ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக நடிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் பல வருடங்களாக பயணித்து வரும் நடிகர் வடிவேலு, இதுவரை நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்து வந்துள்ள நிலையில், முதல் முறையாக வில்லன் கதாபத்திரத்தில் களம் காணவுள்ளார்
இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அப்படக்குழுவினர் விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.