மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் அகன்ஷா மோகன் (வயது 30). பிரபல மாடல் அழகியான இவர், தமிழில் கிடந்த 2015-ம் ஆண்டு வெளியான '9 திருடர்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான சில படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே விளம்பரங்களுக்கு மாடலாக பணியாற்றி வந்துள்ள இவர், தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், work-out வீடியோ உள்ளிட்டவைகளை பதிவிட்டு வருவார். இந்த நிலையில் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஹோட்டல் தங்கி இருந்த இவர், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய முன்தினம் பகல் நேரத்தில் தனது அறைக்கு சென்ற இவர், பிறகு கதவை திறக்கவில்லை. பின்னர் சுமார் 8 மணியளவில் இரவு உணவுப் பரிமாறுவதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். அப்போது திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவரது உடலை மீட்ட அவர்கள் உடற்கூறாய்வு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் நடத்திய சோதனையில் தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்தது.
அந்த கடிதத்தில் "மன்னிக்கவும்.! எனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல.. யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள்.. நான் மகிழ்ச்சியாக இல்லை.. அமைதியை மட்டுமே விரும்புகிறேன்.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !