சினிமா

"இவர்களை கவரவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்தேன்.." - நடிகர் சிம்பு சொன்ன Secret!

தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை இயக்குநரிடம் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இதுவே காரணம் என்று நடிகர் சிம்பு மனம் திறந்து பேசியுள்ளார்.

"இவர்களை கவரவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்தேன்.." - நடிகர் சிம்பு சொன்ன Secret!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகரான நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கம்-பேக் கொடுத்துள்ளார். இவரது இந்த COME BACK ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தையும் வரவேற்பையும் அளித்து வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மாநாடு' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்த வெற்றிக்கு பின்னர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவானது தான் 'வெந்து தனிந்தது காடு'. இப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.10 கோடிகளை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

"இவர்களை கவரவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்தேன்.." - நடிகர் சிம்பு சொன்ன Secret!

இந்த நிலையில் நடிகர் சிம்பு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, "கௌதம் வாசுதேவ் மேனன், எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதையை சொல்வதற்கு முன்பே ஒரு ஆக்ஷன் கதையை தான் சொன்னார். ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்.

ஏனென்றால் அதற்கு முன்பு தான் 'காளை', 'சிலம்பாட்டம்' என ஆக்ஷன் படங்கள் பண்ணேன். எனவே நான் பெண்கள் ஆடியன்ஸை கவர நினைத்தேன். சோ ஒரு ரொமான்டிக் படம் பண்ணலாம் என்று அவரிடம் கேட்டேன். அப்போது அவர் எனக்கு சொன்ன கதை தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

"இவர்களை கவரவே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்தேன்.." - நடிகர் சிம்பு சொன்ன Secret!

அந்த சமயத்தில் அந்த படத்தின் பெயர் 'ஜெஸி'. அந்த பெயர் வைத்து தான் அவர் எனக்கு கதையையும் சொன்னார். மேலும் அந்த கதையில் பெண் கதாபாத்திற்கு தான் முக்கியத்துவம் என்றும் கூறினார். நானும் எனக்கு கதை பிடித்ததால் சரி என்றேன். பின்னரே அந்த 'ஜெஸி' என்ற அந்த படத்தின் பெயர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்று மாற்றப்பட்டு, எனக்கும் திரிஷாவுக்கும் சமமான ரோல் கொடுத்து மாத்தி எழுதினார்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories