சினிமா

'லைகர்' தோல்வி.. விமர்சித்த தியேட்டர் உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா!

மும்பை தியேட்டர் அதிபரிடம், நடிகர் விஜய் தேவரகொண்டா வருத்தம் தெரிவித்துள்ளார்.

'லைகர்' தோல்வி.. விமர்சித்த தியேட்டர் உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த வாரம் 'லைகர்' படம் வெளியானது. இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் படத்தின் இயக்குநர் புரி ஜெகநாத், நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சார்மி என பலரும் கவலையில் உள்ளனர். மேலும் 'லைகர்' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டானது.

'லைகர்' தோல்வி.. விமர்சித்த தியேட்டர் உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா!

இதனால் ஆவேசமடைந்த படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, படத்தை யார் தடுக்கிறார்கள் என பார்க்கலாம் என ஆவேசமா ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து "விஜய் தேவரகொண்டாவின் இந்த பேச்சால்தான் திரையரங்கிற்குப் படம் பார்க்க யாரும் வரவில்லை.

திரையரங்கிற்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்றால் ஓடிடி படங்களில் நடியுங்கள்" என நடிகர் விஜய் தேவர கொண்டாவை விமர்சித்து தியேட்டர் அதிபர் மனோஜ் தேசாய் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

'லைகர்' தோல்வி.. விமர்சித்த தியேட்டர் உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா!

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா, தியேட்டர் அதிபர் மனோஜ் தேசாயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தான் பேசியதற்கான காரணம் குறித்தும் அவரிடம் விளக்கியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories