சினிமா

16 வருடமாக தீர்க முடியாமல் புதிராக இருக்கும் வழக்கு.. அருள்நிதியின் ‘டைரி’ படம் ரசிகர்களை ஈர்த்ததா?

‘டைரி’ படம் முழுவதும் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் இருந்தாலும், எந்த இடத்திலும் தேவையில்லாத காட்சிகளோ, குழப்பும் சீன்களோ, கேர்கடர்களோ படத்தினுள் இல்லை என்பது ப்ளஸ்.

16 வருடமாக தீர்க முடியாமல் புதிராக இருக்கும் வழக்கு.. அருள்நிதியின் ‘டைரி’ படம் ரசிகர்களை ஈர்த்ததா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அருள்நிதியின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் திரைக்கு வந்திக்கும் படம் ‘டைரி’. 16 வருடமாக முடிக்கப்படாமல் புதிராக இருக்கும் ஒரு வழக்கினை கையில் எடுத்து, அதற்கு விடையைக் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதைதான் களம். இந்த, ‘டைரி’ படம் ரசிகர்களை ஈர்த்ததா?

அருள்நிதி நடிப்பில் இந்த வருடத்தின் மூன்றாவது படம் இது. கல்லூரிக்குள் நடக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக ‘D ப்ளாக்’, சஸ்பென்ஸ் த்ரில்லராக ஆடியன்ஸை மிரளவைத்த ‘தேஜாவு’ என இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில், மிஸ்ட்ரி த்ரில்லராக வெளியாகியிருக்கிறது ‘டைரி’.

கதை இதுதான்... சப் இன்ஸ்பெக்டருக்கான பயிற்சியில் இருக்கும் நாயகன் வரதன் ( அருள்நிதி) . அப்போது, தீர்க்கப்படாத வழக்குகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பயிற்சியில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. கண்ணை மூடிக் கொண்டு 16 வருடமாக தீர்க்கப்படாத வழக்கு ஒன்றினைத் தேர்ந்தெடுக்கிறார் அருள்நிதி. என்ன வழக்கு, அந்த கேஸூக்கும் அருள்நிதிக்கும் இருக்கும் தொடர்பு என்ன, குற்றவாளியை கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை.

16 வருடமாக தீர்க முடியாமல் புதிராக இருக்கும் வழக்கு.. அருள்நிதியின் ‘டைரி’ படம் ரசிகர்களை ஈர்த்ததா?

புதுமையான கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் நடிகர் அருள்நிதி. இவரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கும். எந்த ஆர்ப்பாட்டமுமின்றி சட்டிலாக நடிப்பிலும் ஸ்கோர் செய்வார். அப்படி, டைரி படத்தில் சப் இன்ஸ்பெக்டர் வரதனாக அசத்தியிருக்கிறார். போலீஸூக்கான மிடுக்கும், ஒரு வழக்கை கண்டுபிடிப்பதில் காட்டும் புத்திசாலித்தனம், ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோயிசம், மிஸ்ட்ரியான காட்சிகளில் மிரள்வது என நடிப்பில் கச்சிதம்.

நாயகியாக அறிமுக நடிகை பவித்ரா நடித்திருக்கிறார். முதல் சீனிலேயே ஆக்‌ஷனில் அதிரடி காட்டுகிறார். அடுத்தடுத்தக் காட்சிகளில் அழகாய் நிறைகிறார். காமெடிகளில் சாம்ஸ் மற்றும் சரா நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் வில்லன்களை கட்டி வைத்திருப்பார்கள். வில்லன் ரூபத்தில் வரும் பேய் ‘கட்டை அவுத்துவிடுடா’ என மிரட்டும்.. ‘நீ பேய் தான.. நீயே கழட்டிக்கோ’ என கூறுவார் சரா. இந்த மாதிரி, எக்கச்சக்க டைமிங் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

16 வருடமாக தீர்க முடியாமல் புதிராக இருக்கும் வழக்கு.. அருள்நிதியின் ‘டைரி’ படம் ரசிகர்களை ஈர்த்ததா?

சில காட்சிகளில் வந்தாலும் நடிகர் கிஷோர், ஜெயப்பிரகாஷ், நக்கலைட்ஸ் தனம், தணிகை என ஒவ்வொருவருமே கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக வாழ்ந்திருப்பார்கள்.

16 வருடமாக கிடப்பில் இருக்கும் ஒரு வழக்கினை நோக்கி கதைத் துவங்கும். இருப்பினும், டிராக் மாறி, வேறொரு கதைக்குள் கதை நகரும். அதனால், முதல் பாதி முழுவதுமே என்ன நடக்கிறதென்று சஸ்பென்ஸில் வைத்திருப்பார் இயக்குநர் இன்னாசி. முதல் பாதியில் போடப்படும் அனைத்து புதிர் முடிச்சுகளையும் இரண்டாம் பாதியில் பரபரக்கும் திரைக்கதையால் அவிழ்க்கும் இடங்கள் சர்ப்ரைஸ்.

படம் முழுவதும் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் இருந்தாலும், எந்த இடத்திலும் தேவையில்லாத காட்சிகளோ, குழப்பும் சீன்களோ, கேர்கடர்களோ படத்தினுள் இல்லை என்பது ப்ளஸ்.

16 வருடமாக தீர்க முடியாமல் புதிராக இருக்கும் வழக்கு.. அருள்நிதியின் ‘டைரி’ படம் ரசிகர்களை ஈர்த்ததா?

கதைக்குள் துறுத்தாமல் இடம்பெற்றிருக்கும் பாடல் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹன். நிறைய இடங்களில் சஸ்பென்ஸ் சீன்களை இவரின் இசை எலிவேட் செய்கிறது. முதல் பாதியில், சில இடங்களில் எடிட்டர் ராஜசேதுபதி கத்தரியிட்டிருக்கலாம். ஊட்டியின் கொண்டை ஊசி வளைவுகளில், பேருந்தில் என கேமிரா ஒர்க்கிற்காக அரவிந்த் சிங்கினைப் பாராட்டலாம்.

தமிழ் சினிமாவின் பாரம்பரிய வழக்கமான மாஸ் ஹீரோயிச காட்சிகள், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் என எதுவுமின்றி ஷார்ப்பான ஒரு த்ரில்லர் படமாக, சிறந்த திரைக்கதையுடன் பக்கங்களைப் புரட்டுகிறது ‘டைரி’.

banner

Related Stories

Related Stories