சினிமா

ஜீ.வி.பிரகாஷ் பட இயக்குநர் திடீர் மறைவு.. 46 வயதில் மறைந்த இயக்குநருக்குக் திரையுலகம் அஞ்சலி !

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' திரைப்பட இயக்குநர் மணி நாகராஜ் இன்று மரணமடைந்தார்.

ஜீ.வி.பிரகாஷ் பட இயக்குநர் திடீர் மறைவு.. 46 வயதில் மறைந்த இயக்குநருக்குக் திரையுலகம் அஞ்சலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் திருச்சியை சேர்ந்த மணி நாகராஜ். பிறகு நடிகர் ஜீ.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா, அபிஷேக் உள்ளிட்ட திரைபிரபலன்கள் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'பென்சில்'. கிரைம் - திரில்லர் கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தை இயக்குநர் மணி நாகராஜ் இயக்கினார்.

இந்த படமானது கொரியன் படமான '4th Period Mystery' என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே விமர்சன ரீதியாக படத்திற்கும், இயக்குநருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வெளியான பிறகு வெற்றி பெற்றது.

ஜீ.வி.பிரகாஷ் பட இயக்குநர் திடீர் மறைவு.. 46 வயதில் மறைந்த இயக்குநருக்குக் திரையுலகம் அஞ்சலி !

'பென்சில்' படத்தையடுத்து, தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கினார். அதன்படி மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த டைமண்ட் நெக்லஸ் மற்றும் Zachariayude Garbhinikal ஆகிய திரைப்படங்களில் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றிருந்தார்.

அதில் Zachariayude Garbhinigal படத்தை கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் நடிப்பில் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற பெயரில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக்கை, கடந்த ஜூலை 7-ம் தேதி நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஜீ.வி.பிரகாஷ் பட இயக்குநர் திடீர் மறைவு.. 46 வயதில் மறைந்த இயக்குநருக்குக் திரையுலகம் அஞ்சலி !

தற்போது இந்த படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில், இயக்குநர் மணி நாகராஜுக்கு உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டது. இந்த நிலையில், இன்று பகல் நேரத்தில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணி நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

46 வயதுடைய மணி நாகராஜ் மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories