டெல்லியில் இன்று 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த படங்கள் எந்த பிரிவில் தேசிய விருது பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.
சூரரைப் போற்று - 5 விருதுகள்!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஆஸ்கர் விருது பட்டியில் அவரை 'சூரரைப்போற்று' திரைப்படம் தேர்வாகியிருந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை.
இந்நிலையில்தான் 5 விருதுகளைச் சூரரைப் போற்று திரைப்படம் குவித்துள்ளது.
சிறந்த படம் - சூரரைப்போற்று
சிறந்த நடிகர் - சூர்யா
சிறந்த நடிகை -அபர்ணா பாலமுரளி
சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா ஆகிய 5 பிரிவில் தேசிய விருது பெற்றுள்ளது.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் -3 விருதுகள்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படம் - இயக்குநர் வசந்த்.
சிறந்த எடிட்டர் - ஸ்ரீகர்பிரசாத்து
சிறந்த துணை நடிகை - லட்சுமிப்ரியா சந்திரமவுலி.
மண்டேலா - 2
நடிகர் யோகிபாபு நடத்த மண்டேலா திரைப்படம் தேர்தலின் நாம் அளிக்கும் வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நகைச்சுவை மூலம் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த படம்.
இந்த படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதுக்கு மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.