மஞ்சப்பை, கடம்பன் படங்களை கொடுத்த ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியாகியுள்ள ச்சி திரைப்படம் “ மை டியர் பூதம்’. இதுவும் வழக்கமான பூதம் கதை தான். ஒரு முனிவரோட சாபத்துனால பூதமான பிரபுதேவா கல்லாக மாறிவிடுகிறார். அந்த பூதத்தை குட்டிப்பையன் அஷ்வந்த் ரிலீஸ் செய்துவிடுகிறார்.
பூதலோகம் போக பிரபுதேவாவுக்கு முனிவர் ஒரு கண்டிஷனும் போட்டுள்ள நிலையில் அது என்ன? அந்த கண்டிஷனை சக்ஸஸ் பண்ணி முனிவர் பூதலோகம் போனாரா இல்லை இங்கயே சுத்திகிட்டு இருக்காரா என்பது தான் படத்தின் கதை.
இந்த படத்தில் பிரபுதேவா செம ஜாலியாக வருகிறார். ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்த்த ஃபீலை கொடுக்குறார். படத்துக்காக மொட்டை அடிச்சி ஒரு வெரைட்டியான கெட்டப்பில் வருகிறார். படம் முழுவதும் மேஜிக் செய்துட்டு, சிரித்துவிட்டு நம்மையும் எஞ்சாய் செய்ய வைக்கிறார்.
இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு இருக்குற செண்டிமெண்ட் சீன் சூப்பரா ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படம் முழுக்க அவர் ஆடும் ஒரு டான்ஸ் ஸ்டெப் அருமையாக இருக்கிறது. பிரபுதேவாவோட குட்டிப் பசங்க எல்லோருமே சூப்பரா நடித்துள்ளனர். ராசுக்குட்டி அஷ்வந்த், தெறி Rowdy Baby Aazhiya ரெண்டு பேருமே செம க்யூட்டாக இருக்கிறார்கள்.
படத்தில் இமான் குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரியான பாட்டைக் கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க குட்டீஸூக்கான படம். எந்த இடத்துலயும் பெரியவர்களுக்கான படம் கிடையாது. அதனால், இந்தப் படத்துக்குப் சென்று பிரபுதேவாவோட நடனத்தை யாரும் தேட வேண்டாம்.
நிறைய பூதம் படங்கள் பார்த்த காரணத்தால் படம் பெரிய சுவாரசியமாக இருக்காது என்றாலும் படம் இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கிறது. படத்தில் ரம்யா நம்பீசனுக்கு ஒரு ரோல் அவ்வளவுதான். சம்யூக்தாவுக்கும் பெருசா ஏதும் ரோல் இல்லை.
குழந்தைகளுக்கு எதாவது ஒரு குறை இருந்தா அதை வைத்து அவர்களை கஷ்டப்படுத்தாமல், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். தனித்திறமையினால் பெரிய நபர்களாக ஆகவேண்டும் என்று இருப்பவர்களுக்கு படம் ஒரு மோடிவேஷனான இருக்கும். எந்த வித நெகட்டிவ் ரோலும் இல்லாமல் ஒரு சில மைனஸோட வந்திருக்கும் ரொம்ப பாசிட்டிவான படம்தான் மைடியர் பூதம்.