சினிமா

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைமால் அதிருப்தியில் சப்ஸ்கிரைபர்ஸ்.. பைரஸிக்கு வித்திடும் OTTக்களின் அறிவிப்பு!

டிஜிட்டல் தளங்களை பயன்படுத்த மாத சந்தா வழங்குவது மட்டுமல்லாமல் சமீப காலங்களாக குறிப்பிட்ட படங்களை பார்க்க தனியே பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் தளங்கள் கொண்டுவந்துள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைமால் அதிருப்தியில் சப்ஸ்கிரைபர்ஸ்.. பைரஸிக்கு வித்திடும் OTTக்களின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க டிஜிட்டல் தளங்களே முழுமுதற் பொழுதுபோக்காக இருக்க உதவின. தற்போது அத்தகைய ஓடிடி தளங்கள் முழுநேர வியாபார நோக்கில் செயல்பட தொடங்கியிருக்கின்றன.

டிஜிட்டல் தளங்களை பயன்படுத்த மாத சந்தா வழங்குவது மட்டுமல்லாமல் சமீப காலங்களாக குறிப்பிட்ட படங்களை பார்க்க தனியே பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் தளங்கள் கொண்டுவந்துள்ளன.

அதன்படி அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 160 திரைப்படங்கள் பணம் கட்டிப் பார்க்கும் வகையிலான திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதே முறையை ஜீ 5, நெட்ஃப்ளிக்ஸ் தளங்களும் பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், டிஜிட்டல் தளங்கள் படங்களுக்கு தனி தொகை வசூலித்து வரும் நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் விளம்பரங்கள் மூலம் வருமானத்தை அதிகரித்து வருகிறது.

தற்போது நெட்ஃபிளிக்ஸும் இந்த முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் விளம்பரங்களை பார்க்கவா சந்தா தொகையாக நூற்றுக்கணக்கில் பணம் கொடுக்கிறோம் என்று சப்ஸ்க்ரைபர்களை ஓடிடி தளங்கள் புலம்ப வைத்திருக்கின்றன.

மேலும், ஓடிடி தளங்களின் இது போன்ற வியாபார உத்திகளால் மீண்டும் பைரஸிக்கே வழிவகுக்கும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories