ஆப்பிரிக்கா காடுகளுக்குள் புதயலை தேடிப் பயணிக்க இருக்கும் மகேஷ் பாபு
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. அடர்ந்த காட்டுக்குள் புதயலை தேடிச்செல்லும் அட்வெஞ்சர் படமான இதற்கு விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்கா காடுகளில் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜன கன மன’ படத்தின் சென்சார் அப்டேட்!
ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ப்ரித்விராஜ் - சுராஜ் நடித்திருக்கும் மலையாளப் படம் ‘ஜன கன மன’. ப்ரிவிராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வரும் நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தை பார்த்த சென்சார் குழு படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
வலிமை வில்லன் நடிப்பில் உருவாகும் புதிய படம்..!
தெலுங்கு திரையுலகில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர் கார்த்திகேயா. இவர் நடிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் படத்தை க்ளாக்ஸ் இயக்கவுள்ளார். மணி ஷர்மா இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. கார்த்திகேயாவிற்கு ஜோடியாக நேஹா ஷெட்டி நடிக்கிறார்.
‘சாணி காயிதம்’ படத்தின் மிரட்டலான டீஸர் வெளியானது...
‘ராக்கி' பட இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சாணிக் காயிதம்'. கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை வரும் மே 6ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிட உள்ளனர். இதனிடையே படத்தின் டீஸர் தற்போது வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.
கமலின் ‘விக்ரம்’ படத்தில் பயன்படுத்தப்படும் டி ஏஜிங் டெக்னாலஜி
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தின் ப்ளாஷ் பேக் காட்சிகளில் இளம் கமலை திரையில் காட்ட ஹாலிவுட்டில் ஐரிஷ்மேன் உட்பட பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள டி ஏஜிங் தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூன் 3ஆம் தேதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.