இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது அஜித்தின் வலிமை திரைப்படம்.
பைக் ரேஸிங் மூலம் போதை பொருள் கடத்தும் இளம் வில்லனின் செயல்களை போலிஸ் அதிகாரியான அஜித் எப்படி முறியடிக்கிறார் என்பதை சண்டைக்காட்சிகள், சென்டிமென்ட் என பல வகைகளில் காட்சிப்படுத்தியிருந்தது வலிமை.
கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும், வசூல் ரீதியில் நல்ல வரவேற்பையே வலிமை பெற்றுத் தந்ததாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திரையரங்குகளில் வலிமை படத்துக்கு சுமாரான வரவேற்பே இருந்ததாகவும் கூறப்பட்டது.
இப்படி இருக்கையில் தியேட்டர் ரிலீஸுக்கு பின் Zee5 ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், வெளியான ஒரே வாரத்தில் 500 மில்லியன் நிமிடங்களுக்கு (50 கோடி) வலிமை படம் பார்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓடிடி தளத்தில் இது வேறெந்த படங்களுக்கும் கிடைக்காத வரவேற்பு என்று தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இத்தனை கோடி பார்வையாளர்களை வலிமை படம் ஈர்த்துள்ளதை கண்டு zee5 நிறுவனம் மட்டடற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.