20 வயதேயான பில்லி எலிஷ் ‘நோ டைம் டூ டை’ என்ற திரைப்படத்திற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் 2022 விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 'Dune' திரைப்படம் 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது.
20 வயதேயான பில்லி எலிஷ் ‘நோ டைம் டூ டை’ என்ற திரைப்படத்தில் இசையமைத்ததற்காக தனது முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றார்.
கிராமி விருது பெற்ற 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘நோ டைம் டூ டை’. தனது சகோதரர் பினியஸ் ஒ’கன்னல் உடன் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் பில்லி எலிஷ்.
மிகச்சிறந்த இசைக்காக இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை ‘நோ டைம் டூ டை’ தட்டிச் சென்றது.
‘நோ டைம் டூ டை’ படத்தில் இசையமைத்த இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 21ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கர் விருது வென்ற முதல் நபராக மாறியுள்ளார் பில்லி எலிஷ்.
விருதை வென்ற இருவரும் மேடையில் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். பில்லி எலிஷ் “தயாரிப்பாளர் பார்பரா, எம்ஜிஎம் நிறுவனம், இயக்குநர் கேரி ஃபுனாகா மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.