சினிமா

மீண்டும் தொடங்கிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. விஷால் அணியினர் முன்னிலை!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது.

மீண்டும் தொடங்கிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. விஷால் அணியினர் முன்னிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நாசர் தலைமையில் ஒரு அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த்தும் போட்டியிட்டிருந்தனர்.

இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எண்ணப்பட்ட நிலையில் பதிவான வாக்குகளை விட 5 வாக்கு சீட்டுகள் அதிகமாக இருப்பதாகக்கூறி ஐசரி கணேஷ் தரப்பு வாக்குவாதம் செய்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணி முன்னிலையில் உள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories