நடிகர் சங்கதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வாக்குகளை எண்ணலாம் ஆனால் முடிவுகளை மூன்று வாரங்களுக்கு அறிவிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
பின்னர், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க மறுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி வாக்குகளை எண்ணி முடிவுகளை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.