சினிமா

”எழுதுகிறவனின் மரணம் இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தால்..” லலிதானந்த் மறைவால் திரையுரலத்தினர் அதிர்ச்சி!

பாடலாசிரியரான லலிதானந்த் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி தமிழ் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

”எழுதுகிறவனின் மரணம் இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தால்..” லலிதானந்த் மறைவால் திரையுரலத்தினர் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் அதே நேரம் அதே இடம் படத்தில் இடம்பெற்ற அது ஒரு காலம் அழகிய காலம் என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் லலிதானந்த்.

அதன்பிறகு இயக்குநர் கோகுலில் ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமார், காஷ்மோரா படங்களிலும், லோகேஷ் கனகராஜின் மாநகரம், சேரனின் திருமணம், விஜய் சேதுபதியின் ஜூங்கா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

இவர் எழுத்தில் உருவான என் வீட்டுல நான் இருந்தேனே, அடியே என் உன் கண்கள் ரெண்டும் போன்ற பாடல்கள் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவை.

நீண்ட நாட்களாக சிறுநீரக செயலிழப்புக்காக டையாலிஸில் சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்திற்கு ஏற்கெனவே மாரடைப்பும் வந்திருக்கிறது.

இப்படி இருக்கையில், மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த லலிதானந்த் இன்று பிற்பகல் 3.30 காலமானதாக தகவல் வெளியானது. இதனையறிந்த திரைத்துறையினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த லலிதானந்த்தும், நா.முத்துகுமாரும்

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் பணியாற்றிவர்கள் ஆவர். இவர் எலுமிச்சையின் வரலாறு, லெமூரியாவில் இருந்த காதல் வீடு ஆகிய கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories