சினிமா

பீப் பாடல் : ”சிம்பு மீதான புகாரில் ஆதாரம் இல்லை” - வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பீப் பாடல் : ”சிம்பு மீதான புகாரில் ஆதாரம் இல்லை” - வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் சிம்பு பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் கடந்த 2015ம் ஆண்டு பீப் சாங் ஒன்று வெளியானது.

இதனை தொடர்ந்து பாடல் படிய சிம்பு மற்றும் இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதனை தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலிஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு எதிராக இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஸிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோர்ஸில் பதியபட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், நடிகர் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை தள்ளி வைத்தார்.

banner

Related Stories

Related Stories