சினிமா

பிரபல இசையமைப்பாளர் டிஸ்கோ மண்ணன் திடீர் மரணம்.. நடிகர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல இந்தி இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல இசையமைப்பாளர் டிஸ்கோ மண்ணன் திடீர் மரணம்.. நடிகர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1973-ஆம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் பப்பி லஹிரி. இவர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தமிழில் 1985-ஆம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி திரைப்படத்தின் மூலம் அறியபட்டவர். டிஸ்கோ டான்சர், டான்ஸ் டான்ஸ், சல்தே சால்தே மற்றும் ஷராபி போன்ற பிரபலமான திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.

பாலிவுட்டில் பப்பி லஹிரியின் கடைசிப் பாடல் கடந்த 2020-ல் பாகி 3 திரைப்படத்திற்காக உருவாக்கியதாக அமைந்தது. இவர் இசையின் மீது எவ்வளவு காதல் கொண்டோரே இதற்கு ஈடாக தங்கத்தின் மீது காதல் கொண்டனர். அப்போது கழுத்தில் தங்க நகைகளை அணிந்துகொண்டே இருப்பார்.

பிரபல இசையமைப்பாளர் டிஸ்கோ மண்ணன் திடீர் மரணம்.. நடிகர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பப்பி லஹிரி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு தொடர்ந்து சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலம், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories