ரைமா இஸ்லாம் ஷிமு என்பவர் வங்க தேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகையாவார். 1988ம் ஆண்டு முதல் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதோடு சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
வங்கதேச திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினரான ரைமா சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில் கோணிப்பையில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ள்ளார்.
டாக்காவில் உள்ள கெரனிகஞ்ச் பாலத்துக்கு அடியில் ரைமாவின் உடல் சாக்குப்பையால் சுற்றப்பட்டு கிடந்ததை அறிந்த அப்பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வங்க போலிஸார் ரைமாவின் உடலை மீட்டு டாக்காவில் உள்ள சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அந்த உடல் ரைமாவுடையது என உறுதியானதை அடுத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் போலிஸார்.
அதில், ரைமாவின் கணவர் ஷாக்காவாண்ட் அலி நோபிளிடமும், அவரது டிரைவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரைமாவை தான் கொன்றதாக ஷைக்காவாண்ட் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம். இதனையடுத்து நோபிளை மூன்று நாள் காவலில் போலிஸார் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக ரைமா இஸ்லாம் ஷிமாவின் கொலையில் சில நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே ஷிமாவின் மரணம் வங்கதேச திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.