தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அண்மையில் வெளியான டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்ததில் இருந்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோக்களின் பட்டியலிலும் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
டான், அயலான் என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் வேளையில் தெலுங்கு சினிமாவிலும் கால்பதிக்க இருக்கிறார். இருப்பினும் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த அவரது 17வது படமான பாதியிலேயே நின்று போனதற்கான காரணம் தற்போது வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
மேலும் படத்தின் கதை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி 2019ம் ஆண்டே லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகி கோலிவுட்டை கலக்கியது. Love Insurance Company (LIC) என தலைப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் படத்துக்கு 80 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து கதை விவாதத்துடனேயெ படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறதாம். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட்டின் கியாரா அத்வானி நடிக்க வைப்பதாக பேச்சுவார்த்தைகள் போயிருக்கிறது.
மொபைல் கேட்ஜெட் வழியாக 2030ம் ஆண்டுக்கு டைம் டிராவல் செய்து அப்போது நடக்கும் ஃபாண்டசி ரொமாண்டிக் கதையாக LIC படம் உருவாக இருந்ததாம். ஆனால் ஏகப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் தேவைப்பட்டதால் பட்ஜெட் காரணமாக படம் நிறுத்தப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதனையறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஒருவேளை படம் உருவாகி வெளியாகியிருந்தால் கட்டாயம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கோம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.