இன்று இந்தியா முழுவதும் கொண்டாடும் விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக இருப்பது கிரிக்கெட் தான்.
இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல அதையும் தாண்டிய உணர்வு என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது அண்மையில் வெளியான ‘83’ படம்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இந்த உலக கோப்பை என்பதை படம் தெளிவுப்படுத்தியது.
இதில் கேப்டன் கபீல் தேவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ரன்வீர் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடித்திருந்த ஜீவா உட்பட பல முக்கிய கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் காட் ஆஃப் கிரிக்கெட் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் ரன்வீர் சிங்கை வாழ்த்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இப்படத்தைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். ‘83’ சிறந்த ஆல் ரவுண்ட் படம். முதல் உலகக்கோப்பை வெற்றியின் சின்ன சின்ன தருணங்களையும் நினைவுக்கூர வைத்தது. அந்த வெற்றி சிறுவனுக்கும் உத்வேகம் அளித்தது என்பதை நன்கறிவேன் என்று தனக்கு உத்வேகம் அளித்ததையும் நினைவுகூர்ந்து படத்தினையும் பாடியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரன்வீர் சிங்கும் “அந்த சிறுவன் பல தலைமுறைகளுக்கும் உத்வேகம் அளித்துள்ளார். நன்றி மாஸ்டர்” என்று பதிலளித்துள்ளார்.