கோலிவுட்டில் தொடங்கிய நடிகர் தனுஷின் சினிமா பயணம் பாலிவுட், ஹாலிவுட் என பரந்து விரிந்திருக்கிறது. தற்போது தென்னிந்திய சினிமாவின் அங்கமாக உள்ள தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி, சித்தாரா என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கி அட்லூரியின் இயக்கத்திலான நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் தனுஷ். அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் தனுஷே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சேகர் கம்முலா இயக்கத்தில்தான் தனுஷின் டோலிவுட் எண்ட்ரியாக இருக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் இணைந்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் இந்த படத்துக்கு தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என தலைப்பிட்டிருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
சார் படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2022ல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜூனியர் கல்லூரி ஆசிரியராக தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.