தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை சமந்தா தற்போது இந்தியை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க தொடங்கியிருக்கிறார்.
இதனிடையே நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர் தான் மனதளவில் நொறுங்கி போனது குறித்து ஃப்லிம்பேர் நேர்காணலில் சமந்தா உருக்கமாக கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதில், விவாகரத்துக்கு பின்பு மிகவும் நொறுங்கிப் போயிருந்தேன். இறந்துவிடுவேன் என்றுக் கூட நினைத்திருந்தேன். நான் இன்னும் என் வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று எனக்குத் தெரியும்.
மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இப்போது எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களிலும், நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. நான் மிகவும் பலவீனமான நபர் என்று நினைத்தேன். என்னால் இவ்வளவு வலிமையாக இருக்க முடியும் என்று நினைக்கவில்லை. இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்று நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உங்களுக்கு ஒரு மோசமான நாள் இருந்தால் பரவாயில்லை. குரல் கொடுங்கள், புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதையாவது கடந்து செல்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடனேயே பாதி வேலை முடிந்திருக்கும். நாம் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாமல், போராடும் போதுதான், அது முடிவில்லாத போராக மாறிவிடுகிறது என தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகவும் கூறியுள்ளார் சமந்தா.