சினிமா

வாடிவாசல் படத்துக்காக ரிஸ்க் எடுக்கும் சூர்யா; ஷூட்டிங் எப்போது? வெளியானது புது அப்டேட்!

டேனியல் க்ரிக், ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் no time to die படத்தின் ரிலீஸுக்காக கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வாடிவாசல் படத்துக்காக ரிஸ்க் எடுக்கும் சூர்யா; ஷூட்டிங் எப்போது? வெளியானது புது அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாடிவாசல் துவங்குவது எப்போது ?

நடிகர் சூர்யா தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்காக தன்னை தயார்ப்படுத்தவுள்ளார் சூர்யா. இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு சல்லிக்கட்டு விளையாட்டை பற்றி பேசும் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

வி க்ரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா சல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெறவிருக்கும் காளைகளை அடக்கும் காட்சிகள் தத்ரூபமாக இருக்க சூர்யா இந்த ரிஸ்க் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்துக்காக ரிஸ்க் எடுக்கும் சூர்யா; ஷூட்டிங் எப்போது? வெளியானது புது அப்டேட்!

`No Time To Die' படத்தின் புதிய வெளியீட்டு தேதி!

ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸ்களில் 25வது படமாக உருவாகியிருக்கும் படம் `No Time To Die'. டேனியல் க்ரிக், ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கும் இந்த படத்தின் ரிலீஸுக்காக கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கேரி ஜோஜி இயக்கிருக்கும் இந்த படத்தின் மீது உலகளவில் எதிர்ப்பார்ப்பு உள்ளது. படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்ட போஸ்டர் மற்றும் டீஸர் எதிர்ப்பார்பை மேலும் அதிகரித்திருந்தது.

ஆனால் தியேட்டர் ரிலீஸுக்கு கொரோனா பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தை செப்டம்பர் 28ம் தேதி லண்டனில் ஒரு ரெட் கார்பெட் வேர்ல்ட் ப்ரீமியர் நிகழ்ச்சியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதை தொடர்ந்து படம் செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகவுள்ளது. மற்ற நாடுகளின் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories