கொரோனா காரணமாக திரைத்துறை முடங்கி இருப்பதால் பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை வெளியிட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், ஓடிடிக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது.
அதன்படி முக்கிய நடிகர்களின் படங்கள் பலவும் தொடர்ச்சியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. அந்தவகையில் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் ஓடிடியில் வெளியாகிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் 4 படங்களை அமேசான் நிறுவனத்தில் வெளியிட முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி நடித்துள்ள 'உடன்பிறப்பே', தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ஜெய்பீம்', சாரோவ் சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'ஓ மை டாக்', அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' உள்ளிட்ட படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகவுள்ளன.
செப்டம்பரில் 'ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்', அக்டோபரில் 'உடன்பிறப்பே', நவம்பரில் 'ஜெய் பீம்', டிசம்பரில் 'ஓ மை டாக்' படங்கள் வெளியாகவுள்ளன. ஒரே சமயத்தில் தனது 4 படங்களை ஓடிடி நிறுவனத்துக்கு சூர்யா கொடுத்திருப்பது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சூர்யா தயாரிப்பில், ஜோதிகா-சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன்பு ஆன்லைன் தளத்தில் வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்து அதற்காக பல கோடி ரூபாய்க்கு படத்தை விற்றதாகவும் அண்மையில் செய்தி வெளியானது.
இதனையறிந்த திரையரங்க உரிமையாளர்கள், நடிகர் சூர்யாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் சூர்யா தயாரிப்பிலான படங்களை வெளியிடப்போவதில்லை என்றும் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.