வட இந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் தளம் சோனி லைவ். வட இந்திய படங்களை பெரிய தொகைக்கு வாங்கி வெளியிட்டு வந்த சோனி லைவ் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் தங்களின் கவணத்தை திருப்பியுள்ளது. இவர்கள் சிறந்த கதையசம் கொண்டு மக்களின் அதிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களாக தேர்வு செய்து விலை பேசி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, புதுமுகங்கள் நடித்து வெளியான ‘தேன்’, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘தள்ளிப் போகாதே’ கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதில் இவர்கள் மனித வாழ்வியலை தத்துரூபமாக சொன்ன ‘தேன்’ படத்தை வரும் 25ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
‘ஆன்டி இந்தியன்’ படத்தின் தியேட்டர் ரிலீஸில் நீடிக்கும் சிக்கல்!
தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். அவர் இயக்கத்தில் உருவான ‘ஆன்டி இந்தியன்’ படத்துக்கு தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
இந்த படத்தில் மத்திய அரசை விமர்சித்து நிறைய காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தணிக்கைக் குழு ‘ஆன்டி இந்தியன்’ படத்த ரிலீஸ் செய்ய கூடாது என தடை விதித்த நிலையில் படத்தின் இயக்குநர் மாறன் இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளார். படத்தைப் பார்த்த ரிவிஷன் கமிட்டியும் படத்தை முழுதாக வெளியிட முடியாது என்றும் ஏகப்பட்ட இடங்களில் கட் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் ‘ஆன்டி இந்தியன்’ படம் ப்ரான்ஸில் நடைப்பெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இந்த படத்தை கொண்டு போகும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் மாறன்.