கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தொடர்ந்து பிஸியாக நடித்து வந்த நடிகர் தனுஷ் டோலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்க உள்ளார். தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ், பின்னர் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார்.
இதுதவிர ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம் குமாருடன் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் 2 படங்கள் என இவருக்கு படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. கோலிவுட்டில் மட்டும் நான்கு படங்களில் பிஸியாக இருந்து வரும் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்மூலம் நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு தனுஷுக்கு “இளைய சூப்பர் ஸ்டார்” என பட்டமளித்துள்ளது. இதனை கண்ட தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.