தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2010ல் வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ஜெயராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்திருந்தார்கள். கோலிவுட் ரசிகர்களுக்கு புது ஒரு அனுபவமாக அமைந்திருந்த இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜாவோட அடுத்த படமா வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
இந்த படமும் ஹிட்டடிக்கவே தியாகராஜன் குமாரராஜ வளர்ந்து வரும் இயக்குநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். தன்னோட கதைகளிலும் திரைக்கதைகளிலும் புது யுக்திய கையாளும் இவர் அடுத்து ஒரு வரலாற்று கதைய படமாக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கு. இந்தப் படத்துக்கான கதை எழுதும் வேலைகளில் இவர் இப்போது கவனித்து வருகிறார். சீக்கிரமே அந்தக் கதை பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் `ஜகமே தந்திரம்'. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், ஜூன் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்ல ரிலீஸ் ஆக இருக்கிறது. படம் ரிலீஸ் ஆக சில நாட்களே இருப்பதால், ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. `பேட்ட' பட ரஜினியின் கெட்டப் மாதிரியே `ஜெகமே தந்திரம்' படத்தில் தனுஷின் கெட்டப்பும் அமைந்திருக்கு.
இந்த ரெண்டு படங்களுக்குமே திரைக்கதையில் தொடர்பு இருக்குமோ என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் இது பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கம் அளிச்சிருக்காரு. அதில், ”ஜெகமே தந்திரம் படத்துல வர்ற சுருளி கதாபாத்திரம் பேட்ட வேலனோட மகனா இல்ல பேட்ட ரஜினியோட இளம் வயது கதைதான் ஜகமே தந்திரமா இப்டி பலர் என்கிட்ட கேட்டாங்க. அவுங்களுக்குலாம் நான் சொன்ன பதில் ‘இல்லை’ அப்டிங்குறது தான். பேட்ட படத்துக்கும் ஜெகமே தந்திரம் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல, இது வேற கதை” என விளக்கம் கொடுத்திருக்கிறார்.