தெலுங்கில் வந்த புது இயக்குநர்கள் பலரும் பிரமானதமான படங்களைக் கொடுத்தார்கள். அர்ஜூன் ரெட்டி எடுத்த சந்தீப் வங்கா, பெல்லிச்சூப்புலு எடுத்த தருண் பாஸ்கர், மகாநடி எடுத்த நாக் அஷ்வின் எனப்பல பேர் வந்திருந்தனர். அந்த மாதிரி ஒரு டைரக்டர்தான் பிரஷாந்த வர்மா. நானி தயாரிப்பில் இவர் இயக்கின Awe படம் மிகப் பெரிய ஹிட்டானதோடு, இதுவரை வந்த தெலுங்குப் படங்களில் இருந்து முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்தது.
அடுத்ததாக ராஜசேகர வெச்சு எடுத்த `கல்கி' படமும் பெரிய ஹிட். இதன் பிறகு, மூன்றாவது படமாக `ஸோம்பி ரெட்டி' படத்தை இயக்கி, வெளியிட்டார். இதன் பிறகு Awe 2 தான் எடுப்பார் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய அடுத்த படம் ஒரு சூப்பர்ஹீரோ படம் என அறிவித்திருக்கிறார் பிரஷாந்த் வர்மா.
இந்தப் படத்தில் நடிப்பது யார், படக்குழு யார் போன்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. படத்தின் பெயர் `ஹனுமேன்' என அறிவித்திருக்கிறார். கூடவே இந்தப் படத்தை இயக்கி தயாரிக்க இருப்பது பிரஷாந்த் வர்மா என்பது மட்டும் தெரிகிறது. இப்போது படத்துக்காக ஒரு கான்செப்ட் டீசர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். இது தெலுங்கு சினிமாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். எனக் கூறியிருக்கிறார்.
2015ல் வெளியான `காக்கா முட்டை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். விக்னேஷ், ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், யோகிபாபு நடித்திருந்த இந்தப் படம், மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றுச்சு. இதுக்கடுத்ததாக குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை மாதிரியான படங்களை இயக்கினார். இதற்குப் பிறகு இவர் இயக்கத்துல உருவாகி ரொம்ப காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம் `கடைசி விவசாயி' அதன் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மேல் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கு.
இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி இதில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்போ இந்தப் படம் ஓடிடி ரிலீஸ் ஆக இருக்கிறது என சொல்லப்படுது. இது கூடவே `துருவங்கள் பதினாறு' படத்திற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன். இதுல அரவிந்த் சுவாமி, இந்திரஜித், ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா எனப் பலரும் நடித்திருந்தார்கள். இந்தப் படமும் பல காலமாக வெளியாகாமல் இருக்கிறது. இந்தப் படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் சோனி லைவ் தளத்தில் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. சீக்கிரமே இதைப் பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.